பொதுவாக, கணவர்கள் தான் தங்களது மனைவியை அடித்து துன்புறுத்துவதாகவும், ஆபாசமாக நடந்துக் கொள்வதாகவும், காவல்துறையில் புகார் அளிப்பார்கள். ஆனால், இங்கு பிரபல நடிகையின் கணவர் ஒருவர், கண்ணீர் மல்க புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், ஆதில் என்பவரை 2-வது திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், திருமணமாகிய சில மாதங்களிலேயே, கணவர் தன்னை துன்புறுத்துவதாக கூறி, காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகையின் கணவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
5 மாத காலமாக சிறையில் இருந்துவிட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆதில், செய்தியாளர்களிடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது, “நான் ராக்கி சாவந்தை தாக்கவில்லை. அவர் தான் என்னை தாக்கி, நிர்வாணமாக்கி, வீடியோவாக எடுத்தார். மேலும், என்னை ஓரின சேர்க்கையாளராக முத்திரை குத்தவும் முயற்சி செய்தார்” என்று ஆதில் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னை திருமணம் செய்த பின்னரும் அவர் முதல் கணவருடன் தொடர்பில் இருந்தார் என்பது எனக்கு தெரிய வந்தது. இதனால் தான் என்னை அவர் மிரட்டி கொடுமைப்படுத்தினார்” என்றும் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி, பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.