நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிறந்தநாளை ஒட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. காங்கிரஸ் நகரத் தலைவர் அருள்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நினைவகம் நுழைவாயிலில் இருந்து பேரணியாக சென்று அவரது சமாதி முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பு உள்ள இந்திரா காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.