இலவம்பஞ்சு மரத்தை அகற்ற வேண்டும்! புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கோரிக்கை

புதுச்சேரி அரசு பள்ளியில் உள்ள இலவம்பஞ்சு மரத்தை அகற்றாததால் வனத்துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம் பகுதியில் அரசு உயர் நிலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள இளவம் பஞ்சு மரத்தில் உள்ள பஞ்சுகள் காற்றில் பறந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு.

எனவே பாதிப்பு ஏற்படுத்தும் இம்மரத்தை உடனடியாக அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் ஆத்திரமடைந்த அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு அதிகாரி அருள்ராஜ் சில மரக்கன்றுகளை நடும் படங்களை காண்பித்து விளக்கம் அளித்தால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது

RELATED ARTICLES

Recent News