புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சையது அப்துல் ஹாசன் என்பவர், செருப்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஷேக் அப்துல்லா, சீனாவில் மருத்துவம் படிக்க சென்றுள்ளார்.
சமீபத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். மீண்டும் கடந்த 11-ஆம் தேதி அன்று, மருத்துவ பயிற்சிக்காக ஷேக் அப்துல்லா சீனா சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்ற சில நாட்கள் மட்டும் சரியாக பேசிய வந்த அப்துல்லா, கடந்த 10 நாட்களாக, பெற்றோருடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் க்யூக்கார் மருத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து, கடந்த 28-ஆம் தேதி அன்று அழைப்பு வந்துள்ளது.
அதில், ஷேக் அப்துல்லா உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து, தனது மகனின் உடலை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில், அப்துல்லாவின் பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.