மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்தனர். இது எதிர்கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் கைதைக் கண்டித்து புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள செல்போன் டவர் மீது இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.