அஜித் ஜென்டில் மேன் இல்லை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் ஒரு ஜென்டில் மேன் என்று ரசிகர்கள் பலரும் அடிக்கடி கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கூற்றை மறுக்கும் வகையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அஜித் என்னிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், பல வருடங்கள் ஆகியும், அந்த கடனை திருப்பித் தரவில்லை. அஜித் தன்னை ஜென்டில் மேன் என்று சொல்கிறார்.

ஆனால், அவர் அப்படி இல்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த பேட்டி இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News