2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தமிழ்நாடு பாஜகவில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் 25 சீட்டுகளை வெல்வோம் என்று அண்ணாமலை சவால் விட்டு வருகிறார். பிரதமர் மோடி ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் அளவுக்கு பாஜக இன்னும் முழு வீச்சில் தயாராகவில்லை என்று அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்ற செய்தியை மேலிடம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவது குறித்து பிறகு யோசிக்கலாம் என்றும் 2024 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.