மின் கட்டண உயர்வை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள்.
தற்போது தமிழக அரசு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 வரை அதிகரித்து உள்ளது. தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30-க்கும் , பாமாயில் ரூ. 25-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் ரேஷனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.