வட மற்றும் தென் தமிழகத்தில் செப்டம்பர் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு என நகர்ந்து ஒரிசா பகுதிகளுக்கு சென்று விடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம்., புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மணிக்கு 45கிமீ முதல் 55கிமீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்றும்., சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது..