சென்னையில் போலீஸ்காரர் மீது ரௌடிகள் தாக்குதல்..!

சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே சிலர் மதுபோதையில் தகராறு செய்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்திருக்கிறது. அதனை விசாரிக்க ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபுவை காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

வழியில் தனது செல்போனை தவறவிட்டதாக ரவுடி பிரபு கூறியிருக்கிறார். இதையடுத்து ரவுடி பிரபுவை காவலர் நாகேந்திரன் அழைத்துச் சென்றிருக்கிறார். அபோது பிரபுவின் கூட்டாளி என நினைத்து காவலர் நாகேந்திரன் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த காவலர் நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

RELATED ARTICLES

Recent News