சென்னை நொளம்பூர் காவல் நிலையம் எதிரே “ஜெய் பாரத்” அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் பதவி வகித்து வருகிறார்.
இவர் தன்னுடன் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் யாரேனும் பிரச்சனையில் ஈடுபட்டால்., அவர்களுக்கு தண்ணீர் வழங்காமல் தடை செய்வதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தன்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த சரவணன் என்பவரின் வீட்டிற்கு வரும் தண்ணீரை வெங்கடேசன் தடை செய்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது வெங்கடேசன் சரியான பதில் அளிக்காமல் தன்னுடன் இருந்த நிர்வாகிகள் மூலம் சரவணனை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நொளம்பூர் காவல் நிலைய காவலர் பாலாஜி மற்றும் பெண் காவலர் மஞ்சு ஆகியோர் விசாரணைக்காக வந்த நிலையில் வழக்கறிஞர் வெங்கடேஷ் காவலர் பாலாஜியை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்த காவலர் பாலாஜி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து அம்பத்தூர் போலீஸாரை தாக்கிய குற்றத்திற்காக பாமக வழக்கறிஞர் வெங்கடேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..