“கற்பனைக்கும் அப்பால் தண்டனை” – அதிரடி முடிவு எடுத்த பிரதமர்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு, கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை கிடைக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தான், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு, பல்வேறு அரசியல், கலைத்துறை பிரபலங்கள், கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகர் அஜித் தோவல், ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, ராணுவ அமைப்பினருக்கு பிரதமர் முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு, அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News