கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் பிரம்மாண்ட வசூலை வாரிக்குவித்தது.

பிச்சைக்காரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ படம் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.இப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.
‘பிச்சைக்காரன் 2 கடந்த மே 19-ந் தேதி உலகமெங்கும் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி மூன்று நாட்களில் ரூ.22 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைக் காட்டிலும் ஆந்திராவில் பிச்சைக்காரன் 2 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.