பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் தான் “பீனிக்ஸ்”. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், முத்துகுமார், தேவதர்ஷினி, வர்ஷா, அபி நக்ஷத்ரா, சம்பத்ராஜ், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பிரேவ்மேன் தயாரிப்பில் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால் சில அரசியல் காரணங்களால் இப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யாவின் தந்தை விஜய் சேதுபதி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டமும் உண்டு. இப்படி விஜய் சேதுபதி இருக்கையில்., இவரது மகன் சூர்யா சேதுபதி., நல்ல ஹிட் கொடுப்பாரா என பார்க்கலாம்.
ஹீரோ சூர்யா சேதுபதியின் தந்தையை சிலர் கொலை செய்வதால்., அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் சூர்யா, எம்.எல்.ஏ சம்பத்தை கொடூரமாக கொலை செய்கிறார். அப்போ அவருக்கு வயசு குறைவு காரணமாக சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கு போகிறார் சூர்யா.
அரசியல்வாதிகளிடம் சாதாரணமாக ஒரு பிரச்சனையில் சிக்கி கொண்டாலே அவர்கள் சும்மா விட மாட்டாங்க. இதுல நம்ப ஹீரோ எம்.எல்.ஏ-வை கொலை செய்தால் சும்மா விடுவாங்களா.. சூர்யாவை தீர்த்துக்கட்ட ஆட்கள் போக அவர்களிடம் இருந்து சூர்யா எப்படி தப்பி செல்கிறார். என்ன கலவரங்கள் நடக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது.
அப்பா போல் மகன் :
தந்தையை போல மகன் நடிப்பில் மாஸ் செய்துள்ளாரா எனக்கேட்டால் சற்று பாராட்டலாம். முதல் படம் என்பதால் இவருக்கு இன்னும் பக்குவங்கள் தேவை எனலாம்..
ஆனால் தந்தையின் பேச்சும்., நடிப்பும் பலரையும் கவர்ந்ததை போல இவரின் நடிப்பு இன்னும் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை எனலாம்..
படம் எப்படி இருக்கு :
இந்திய அளவிலான பைட் மாஸ்டர் அனல் அரசின் படம் என்பதால் சண்டை காட்சிகளுக்கு இப்படத்தில் பஞ்சமில்லை., அதிலும் ஒரு குறையும் இல்லை என சொல்லலாம். ஆனால் நம் மனதில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்துமா என கேட்டால் அது கேள்விக்குறி படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.