பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் கவர்னராக ரோயல் டெகாமோ 2011 ம் ஆண்டு முதல் இருந்து வந்தார்.

இவர் நேற்று தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகரில் மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்தார். அப்போது ராணுவ உடையில் வந்த சில மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியை எடுத்து ரோயல் டெகாமோவை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் கவர்னர் ரோயல் டெகாமோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.