நாட்டின் தலைநகரான டெல்லியில், காற்று கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும், பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும், ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நவம்பர் 1-ஆம் தேதி முதல், எலக்ட்ரிக், சி.என்.ஜி, பி.எஸ். 5 வகையிலான வாகனங்களை மட்டும் தான், தேசிய தலைநகர் மண்டலங்கள் என்று அழைக்கப்படும், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்களில் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்-க்கு, டெல்லி சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், காற்று மாசை குறைப்பதற்கு, பி.எஸ் 5 வகையிலான வாகனங்களை மட்டுமே தேசிய தலைநகர் மண்டலங்களின் ஒட்டுமொத்த பகுதியிலும், பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதாலும், அன்னை மாநிலங்களில் விவசாய எச்சங்களை எரிப்பதாலும், காற்றின் தரம் அதிக அளவில் மாசடைகிறது.
எனவே, அவசர கூட்டத்தை கூட்டி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.