தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். அதன் படி திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று காலை விமான நிலையத்தில் இருந்து., தனது பிரச்சார வாகனம் மூலம் சாலைகளில் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இதனிடையே அரியலூரில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கீழப்பழுவூர் வழியாக மாற்றுப் பாதையில் விஜய் செல்லவுள்ளதாக தகவல்
மேலும் காவல் துறையினர் சில நிபந்தனைகளை நேற்று விதித்திருந்தனர் அதாவது.,
காவல்துறையினரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்;
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது
தலைவர் விஜய் நிகழ்ச்சியை முடித்துச் செல்லும் போது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து செல்லக் கூடாது
உயர் நீதிமன்ற உத்தரவின் படி நெடுஞ்சாலைகள், பிராதன சாலைகளில்பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை
கூட்டத்தில் பேசும் போது பிறர் மனம் புண்படுத்தாத – வகையில் பேச வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டிருந்தது.,
அதன்படி இன்று பிரச்சாரம் துவங்கிய நிலையில்., அதனை தவெக நிர்வாகிகள் பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நாகை அவுரித்திடலில் விஜய் பிரச்சாரத்திற்காக தவெகவினர் அனுமதி கேட்ட நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தவெகவினர் 20-ஆம் தேதி கேட்ட நிலையில் அதே நாளில் திமுகவினர் கூட்டம் நடத்த ஏற்கெனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகத்திலும் விஜய பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது