தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சுகுணா சிங் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தீபாவளி முன்னிட்டு இரயில்வே காவல் துறை சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் ரெயிலில் பட்டாசுகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. தீபாவளியை காலத்தில் வடமாநில கொள்ளையர்கள் வருவார்கள் அவர்களையும் கண்காணித்து வருகிறோம். இரயில்வே போலீசார் உடன் இணைந்து சென்னை குற்ற பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் தங்கள் ரெயிலில் முன்பதிவு செய்த இடத்தில் வேறு யாரும் ஆக்கிரமித்திருந்த நிலையில் பொதுமக்கள் இரயில்வே உதவி என் 1391510 தொடர்புகொள்ளலாம். சென்னையில் தீபாவளிக்கு மொத்தம் 1300 இரயில்வே காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1000 கிலோ கடத்தல் அரிசி கொருக்குபெட்டையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பட்டாசுகளை ரயிலில் கொண்டு சென்றால் 5000 ரூபாய் அபதாரம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.