ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி இந்தியில் ரிலீஸ் ஆன திரைப்படம் பதான். 4 வருடத்துக்கு பிறகு ஷாருக்கான் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தீபிகா படுகோனின் காவி பிகினி விவகாரம் படத்துக்கு நல்ல புரோமோஷனை பெற்று தந்தது.
இந்த நிலையில் வெளியான முதல் நாளில் சுமார் 106 கோடிகளை அள்ளிய இப்படம், ஐந்தாவது நாளான இன்று ரூ.550 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிரது. ஆகவே தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் பாலிவுட் திரைஉலகத்திற்கு பதான் திரைப்படம் நம்பிக்கையை அளித்துள்ளது எனக் கூறப்படுகிறது.