பதான் படத்தின் போஸ்டருக்கு தீ வைத்த இந்து அமைப்பு..!

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் ‘பதான்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 2500 க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை இந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக இருப்பதாக பதான் திரைப்படத்திற்கு இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம், பகல்பூர் பகுதியில் பதான் படத்தின் போஸ்டர்களை இந்து அமைப்பினர் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள திரையரங்குகளில் படத்தை திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

RELATED ARTICLES

Recent News