விமான பயணத்தின் போது விதிகளை மீறி அத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம்(டி.ஜி.சி.ஏ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ரவீந்திர குமார் எழுதியுள்ள கடிதத்தில் “விமானத்தில் புகை பிடித்தல், மது அருந்துதுதல், தகாத முறையில் நடந்து கொள்ளுதல் அல்லது பாலியல் தொந்தரவு இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.