கனிம வள திருட்டை தடுக்க முடியவில்லை…பதவியை ராஜினாமா செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ராமேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், மெட்ராத்தி ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மெட்ராத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் கிராவல் மண் உள்ளிட்ட கனிம வள கொள்ளையை தடுக்க முயன்றேன். ஆனால் என்னால் முறைகேட்டை தடுக்க முடியவில்லை. என் மீது பொய் வழக்கு போடுவதாக சிலர் மிரட்டுகிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்காக ஊராட்சி மன்றத்தில் கோரிக்கை விடுத்தும், எந்த வித நலத்திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. எனவே, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

Recent News