உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு, பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவனம், பல்வேறு சமயங்களில் ஸ்பான்சர் செய்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர் Youtuber ஜோதி மல்ஹோத்ரா. இவர், பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறி, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால், சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு, பாகிஸ்தானில் இயங்கி வரும் சுற்றுலா நிறுவனமான Wego, ஜோதிக்கு பல்வேறு சமயங்களில் நிதியுதவி அளித்திருப்பதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஜோதிக்கு நிதியுதவி செய்துள்ள மற்ற நிறுவனங்களையும், காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் வழக்கில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.