ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் உலகளவில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்கர் வெல்லவும் ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும் படங்களின் பட்டியலை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடுகிறார்கள். அந்த பரிந்துரை பட்டியலில் பல்வேறு பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர். படம் இருக்க வேண்டும் என்பதே இந்திய சினிமா ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த பாடல், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த வி எஃப் எக்ஸ், சிறந்த ஒலி என 6 பிரிவுகளில் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.