48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

பேருந்துகள் சேதம் குறித்து செய்திகள் தொடர்ந்து வரும் நிலையில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புக்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்க அனைத்து போக்குவரத்து கழக மேலான் இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News