ஓபிஎஸ் அதிமுக தொண்டர்களின் இரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி: ஜெயகுமார்!

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: அதிமுக-வை 90 சதவீதம் இணைத்துவிட்டதாக சசிகலா கூறுவது சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போன்றது. கட்சிக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் இரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி போன்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.

அதிமுக எழுச்சியுடன் பயணித்து வருகிறது. அதிமுக பற்றி தொடர்ந்து மாய கருத்தை சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். அண்ணாமலை என்கிற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று கூறினார்”.

RELATED ARTICLES

Recent News