குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் உள்ள விமான படை தளத்தில், விமான படை அதிகாரிகளுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.
தற்போது உலகம் பார்த்தது வெறும் டிரைலர் மட்டும் தான். சரியான நேரம் வரும்போது, முழு படத்தையும், இந்தியாவின் பாதுகாப்புப்படை காட்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் தனது பாதையை சரி செய்யவில்லை என்றாலும், தவறான செயல்களில் ஈடுபட்டாலும், நம்முடைய படை கடுமையான பாடத்தை அவர்களுக்கு கற்றுத்தரும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானில் வளர்க்கப்பட்டு வரும் தீவிரவாத கும்பல்களை அழிப்பதற்கு, இந்திய விமான படைக்கு வெறும் 23 நிமிடங்கள் போதுமானதாக இருந்தது என்றும், ஆபரேஷன் சிந்தூரின் போது, உங்களது செயல் எங்களை மிகவும் பெருமைப்பட வைத்தது என்றும், தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.எம்.எஃப்-ல் இருந்து பெறப்பட்ட பணத்தில், பெரும்பாலானவற்றை, தீவிரவாத அமைப்புகளை வளர்ப்பதற்கு பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்றும், அவர் கூறியுள்ளார்.