சகோதரிக்காக உருகிய நடிகை ஊர்வசி!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஊர்வசி. இவர், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், தனது சகோதரி கல்பனாவுக்கு, அவரது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், இன்றைய இளம் இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தால், சினிமாவில் இன்னும் அவர் செழித்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், படைப்பு தொடர்பான விஷயங்களில் ரிஸ்க் எடுக்க, இன்றைய இயக்குநர்கள் தயாராக இருப்பதாகவும், நடிகர்கள் தங்களது முழு திறமையை காட்டுவதற்கு, அவர்கள் இடம் கொடுப்பதாகவும், ஊர்வசி கூறியுள்ளார்.

அதற்காக, பழைய இயக்குநர்களை, தான் குறைத்து மதிப்பிடவில்லை என்றும், அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஊர்வசியின் சகோதரி கல்பனா கடந்த 2016-ஆம் ஆண்டு அன்று, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News