தண்ணீர் பக்கெட்டில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..!

கடலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

கடலூர் மாவட்டம் கே.என் பேட்டையை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் – ஞானசௌந்தரி தம்பதியினர். இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று வீட்டின் உள் விளையாடிக் கொண்டிருந்த குண ஸ்ரீ என்ற பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News