காசி அயோத்தியில் வருகிற 22 ஆம் தேதி அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்படவுள்ளது.இதற்கு பலருக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இது குறித்து மத்திய இணை அமைச்சா் எல் முருகன் தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.
ஸ்ரீ ராம ஜோதியை ஏற்றுங்கள் … !
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 5, 2024
வருகின்ற 22-ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தாழ்மையுடன் பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள்… pic.twitter.com/yrqAiGpO8a
அதில் கூறியுள்ளதாவது, வருகின்ற 22-ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தாழ்மையுடன் பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை நாம் அனைவரும் செய்வோம் என்று உறுதி அளிப்போம். ஜெய் ஸ்ரீ ராம் …! என கூறியுள்ளார்.இவாின் இப்பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.