இயக்குநா் பிளஸ்சி இயக்கத்தில் மலையாள நடிகா் பிரித்விராஜ் நடிப்பில் ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படம் உருவாகிவருகிறது.பென்யாமினின் என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலாின் கவனங்களை ஈா்த்தது.
தற்போது இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆடுகளுக்கு நடுவில் நீளமான முடி மற்றும் தாடியுடன் வெளியான பிரித்விராஜின் வினோத கெட்டப்பிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவுசெய்து போஸ்டரை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.