மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோர் என்ற பகுதியில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 238 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 40க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து ஹவுரா செல்லும் ரயில்கள் புவனேஸ்வர் வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.