நடுரோட்டில் காவலரிடமே ஆபாச செயல்..! சிக்கிய வாலிபர்கள்..!!

சென்னையில் போக்குவரத்து காவல் துறையினரிடம் ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகே போக்குவரத்து போலீசார் இரவு எட்டு மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 3 பேரை மடக்கிய போது அதில் இரண்டு பெரும் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பிய நிலையில் அந்த வாலிபர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து பெயர் முகவரி கேட்ட போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர் பெண் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசி., ஆபாச செய்கை காண்பித்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் அவருக்கு டி.டி.சோதனை செய்த போது அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி., வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து மது போதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால்., பேசி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த டெல்லி பாபு (வயது 24) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து டில்லி பாபு மீது வழக்கு பதிவு செய்த எம்.கே.பி.நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

RELATED ARTICLES

Recent News