“இனி ஆன்லைனிலும் துணியை தொட்டுப்பார்த்து வாங்க முடியும்” – அசத்தல் தொழில்நுட்பம்!

ஆன்லைன் மூலம் வாங்கும் ஆடைகளை செல்போன் தொடுதிரை மூலமே தொட்டுப்பார்த்து வாங்கும் புதிய தொழில் நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

காலமாற்றத்துக்கு ஏற்ப தற்போது கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்குவோரை விட ஆன்லைன் மூலம் ஆடைகளை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் துணிகளின் தன்மை தரம் உள்ளிட்டவற்றை தொட்டு உணர்ந்து வாங்க முடியாது, என்ற நிலையில் தரமற்றதுணிகளை வாங்கிவிடும் நிலையும் நேர்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஐ டாட் என்ற ஒரு புதிய மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக செல்போனின் மேல் திரையில் கூடுதலாக ஒரு சென்சார் திரை பொருத்தப்படுகிறது.

அதன் மூலம் துணிகளின் தன்மை, உறுதி, உள்ளிட்டவற்றை தொட்டுப் பார்த்து உணர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். தற்போது கணினி மூலம் இந்த தொழில் நுட்பம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள் விரைவில் செல்போன்கள்ல் பொருத்தும் வகையில் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News