இனி வாட்ஸ் ஆப் மூலமாக EB பில் கட்டலாம்..எப்படி தெரியுமா?

மின் கட்டணத்தை EB ஆபிசுக்கு சென்று நேரடியாக செலுத்துவோம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் பணத்தை செலுத்துவோம். இந்த நடைமுறைகள் ஏற்கெனவே இருந்து வருகின்றன.

இந்நிலையில், மின் கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் கட்டணம் செலுத்தும் நுகர்வோர்கள், வாட்ஸ் அப்பில் யுபிஐ வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கட்டணத்தை செலுத்தும் போது வாட்ஸ் அப்பில் டான்ஜெட்கோவின் இலச்சினை, பச்சை குறியீடு மற்றும் அதிகாரப்பூர்வ எண்ணை சரிபார்த்த பிறகு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News