பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையா..!! வடமாநில வாலிபர்கள் கைது..!

சென்னை பல்கலை பேருந்து நிறுத்தத்தில், பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர்கள் இருவரும் கடந்த மாதம் 31ம் தேதி சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

மெரினாவை சுற்றி பார்த்து விட்டு., அருகேயிருந்த சென்னை பல்கலைகழக பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர்கள் இரண்டு பேர்., பெண் காவலர்களை பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசியும்., பாலியல் ரீதியான் செய்கைகளை செய்ததாகவும் சொல்லப்படுங்கிறது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பெண் காவலர்கள் திட்டியுள்ளனர் அதனை பொருட்படுத்தாத வடமாநில வாலிபர்கள்., காவலரின் கையை பிடித்து தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர். பெண் காவலர் சத்தமிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த தீப்நாராயண சுக்லா, கொடுங்கையூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2பேரை பெண் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News