முகமூடி அணிய அவசியமில்லை! இபிஎஸ் காட்டம்..!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது,

நான் முகத்தை துடைத்தேனா..?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில். அவரை தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்தேன். பின்னர் துணை குடியரசு தலைவரை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டு அரசு வாகனத்தில்தான் துணை குடியரசு தலைவரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்ததாக விளக்கம் அளித்தார்.

பிறகு அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கைக்குட்டையால் தனது முகத்தை துடைத்ததை முகத்தை மறைத்து சென்றதாக சில ஊடகங்கள் அவதூறாக செய்தி வெளியிட்டதை சுட்டிக்காட்டி, நான் முகத்தை துடைத்தேனா..? எனது கைக்குட்டையால் முகத்தில் வியர்வையை துடைத்தேன்.

இனி கழிவறைக்கு சென்றால் கூட ஊடகங்களிடம் சொல்லிவிட்டுதான் செல்ல வேண்டும் என்ற அச்சம் எழுந்துவருவதாக கூறினார்.

நான் முகத்தை துடைத்தேனா..?

தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதை பேச வேண்டும் என்று தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபிள்ளை தனமாக விமர்சித்து வருவதாக தெரிவித்தார்.

டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களையே ஆளும் கட்சியான உடன் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளித்ததாகவும், திமுக ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு இருப்பதாக விமர்சித்தார்.

நான் முகத்தை துடைத்தேனா..?

பாஜகவால்தான் அதிமுகவின் ஆட்சி காப்பாற்றப்பட்டதா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் முதல்வராக இருந்த போது யாரும் எனக்கு துணையாக இல்லை. ஆனால் தன்னை விமர்சனம் செய்தவர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி மத்திய அரசு துணையாக இருந்ததாக பெருமிதம் பேசினார்.

நான் முகத்தை துடைத்தேனா..?

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தான் தலையிட மாட்டேன் என்றும், யார் கட்சி கட்டுப்பாட்டை மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறினார்.

நான் முகத்தை துடைத்தேனா..?

2011ல் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை ஜெயலலிதா நீக்கியதை சுட்டிக்காட்டி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முகமுடி அணிந்து அதிமுகவிற்குள் வந்தவர்தான் டிடிவி தினகரன். என்னை முகமுடி அணிந்து சென்றாக கூறுவது எந்த விதத்தில் நியாயம்..? முகமூடி அணியும் பழக்கம் எனக்கில்லை என அவர் காட்டமாக தெரிவித்தார்.

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியதில் இருந்து தான் டிடிவி தினகரன் இப்படி பேசுகிறார். இதில் என்ன உள்குத்து உள்ளது என்று தெரியவில்லை.

என்னை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை :

செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின் இப்போது அவரையே பாராட்டி பேசுவது எப்படி நியாயமாகும்..? ஸ்டாலினுக்கு கொடுப்பதை கொடுத்து தேவையானதை வாங்கி கொண்டவர் செந்தில்பாலாஜி.

திமுகவில் பாராட்ட மூத்த தலைவர்களே இல்லையா..? இப்படி பட்ட முதலமைச்சருக்கு எங்களை விமர்சிக்க தகுதி இல்லை. விசுவாசம் என்ன விலை என்று கேட்கும் அமைச்சர் ரகுபதிக்கும் எங்களை விமர்சிக்க தகுதி இல்லை. என்று இவ்வாறே செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

RELATED ARTICLES

Recent News