திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நோ கமெண்ட்ஸ்” என பதில் அளித்து சென்றது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர்2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். Yatri Sewa Diwas – தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் நடனமாடி பயணிகளை வரவேற்றனர். அப்போது, அங்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த்,ஜெயிலர் 2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கேரளா செல்ல வந்துள்ளதாகவும் ஆறு நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும் கூறினார். மேலும் ஜூன் மாதத்திற்கு மேல் அப்படம் வெளியாகும் என தெரிவித்தார்.
அப்போது திரைக் கலைஞர்களுக்கு வரக்கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே, அதற்கு நோ கமெண்ட்ஸ் என கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னும் இமயமலை பனி சரிவில் சிக்கி உயிர் இழந்தோர் குறித்து நடிகர் ரஜினிகாந்த்திடம் கேட்ட போது., “ஓ மை காட்” எப்போ என கேள்வி கேட்ட நிலையில் இப்போது மீண்டும் “நோ கமெண்ட்ஸ்” என பதில் அளித்திருப்பது சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது..