ஐ.நா. சபையில் பேசிய நித்தியானந்தாவின் சீடர்..! கைலாசா நாடு என்று ஒத்துக் கொண்டதா ஐ.நா..?

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதால், பெரும் சர்ச்சையில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. இதன்காரணமாக ஜெயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய அவரிடம், மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும், திருந்தாத நித்தியானந்தா, ஆள் கடத்தல், குழந்தைகளை அடைத்து வைத்து உள்ளிட்ட வழக்குகளில் சிக்கினார்.

அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அதில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அன்று, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நித்தியானந்தாவின் பெண் சீடர் ஒருவர் கலந்துக் கொண்டு, ஐ.நா சபை நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, இந்து மதத்தின் வாழ்க்கை முறையைப் புதுப்பித்ததற்காக எங்கள் தலைவர் நித்தியானந்த கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளார் என்று அந்த பெண் சீடர் தெரிவித்தார்.

மேலும், நித்தியானந்தா மற்றும் கைலாசாவில் உள்ள புலம்பெயர்ந்த 20 லட்சம் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?’ என்றும் ஐ.நா.விடம் அவர் கேட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News