விஜய்சேதுபதி நடிப்பில், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் மகாராஜா. கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 200 கோடி ரூபாய் வரை, வசூலித்திருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் குறித்து, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், மகாராஜா 2-ஆம் பாகத்திற்கான கதையை, விஜய்சேதுபதியிடம் கூறியிருக்கிறாராம்.
இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டதால், அதற்கான முழு ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இயக்குநர் ஈடுபட்டு வருகிறாராம். விஜய்சேதுபதி தற்போது தன் வசம் உள்ள அனைத்து படங்களையும் முடித்த பிறகு, மகாராஜா 2வில் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.