தமிழ் திரையுலகில் ஒருநாள் கூத்து என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். மேலும் இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஜித்தன் ரமேஷ்,இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்த ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.சமீபத்தில் வெளியான இப்படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.இதில் நடிகர் அதர்வா நடிகராக நடிக்கவிருப்பதாக சினிமா வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் ,இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.