சென்னையில் புதிதாக வைரஸ் தொற்று பரவி வருகிறது என சொல்லப்படும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக சில தகவல்கள் வெளியானது. இதனால் பொதுமக்கள் பலரும் அச்சமடைந்து இருப்பதால் பொது சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் தற்போது பரவி வருவது மர்ம காய்ச்சல் இல்லை என்றும்., இவை சாதாரண Influenza A காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காய்ச்சல் மற்றும் சளியால் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..
தற்போது அரசு, தனியார் மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்வதாகவும்., அவர்களுக்கு எவ்வித வைரஸ் மற்றும் மர்ம காய்ச்சல் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.