பெண் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய தற்காப்பு கலை பயிற்சி…!!

அரக்கோணம் சி ஐ எஸ் எப் பயிற்சித்தளத்தில் பெண் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ராஜாத்தி சோழனின் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் வகையில் நாடு முழுவதும் தகுதியான ஆண் மற்றும் பெண் வீரர்களை தேர்வு செய்யப்பட்டு கடுமையான பயிற்சி வழங்கப்படுவதுடன் நாட்டின் முக்கிய இடங்களான விமான நிலையங்கள், துறைமுகங்கள், உயர்நீதிமன்றங்கள், அணுமின் நிலையங்கள், விஐபி மண்டலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கும் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தற்பொழுது இந்த பயிற்சி தளத்தில் 1500 பெண் காவலர்கள் மற்றும் 500 ஆண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் படைப் பிரிவில் பெண் காவலர்களின் பங்கு தொடர்ந்து விரிவடைந்து வருவதால் பெண் பாதுகாப்பை உறுதி செய்யவும், தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளவும், பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான துஷ்பிரயோகம், பயங்கரவாத தாக்குதல், நக்சல் தாக்குதல் மற்றும் சமூக விரோத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான திறமைகளையும், நம்பிக்கையும் வழங்க சிறப்பு பயிற்சியின் தேவை அதிகரித்து வருகிறது. ஆகவே தான் பயிற்சியின் போது இஸ்ரோலியா நாட்டின் தற்காப்பு கலையின் ஒரு அங்கமான இன்டர்நேஷனல் அல்டிமேட் க்ரோவ் மகா பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் விக்ரம் கபூர் தலைமையில் பெண் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியின் நிறைவு விழா மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளி முதல்வர் டிஐஜி சரோஜ்காந்த் மாலிக் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது பயிற்சி முடித்த பெண் காவலர்கள் பயிற்சியின் போது கற்றுத்தரப்பட்ட தற்காப்பு யுக்திகளை மிடுக்கான பாணியில் நடத்திக் காட்டினர்.

அப்பொழுது பேசிய டி ஐ ஜி சரோஜ் காந்த் மாலிக்,இந்த தற்காப்பு கலை பயிற்சியை பெண் காவலர்கள் கற்றுக் கொள்வதினால் பாலியல் தொல்லை உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புக்களிருந்தும் எங்ஹ வித ஆயுதங்கள் இல்லாமல் எந்த விதமான பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ள திறமையானவர்களாக உள்ளனர். அதேபோல் நிறைய பெண்கள் இந்த பயிற்சியில் சேர வேண்டும் எனவும் அப்படி தற்காப்பு கலை கற்றுக் கொள்வதினால் ஆண், பெண் சமம் என்ற நிலை உருவாகும் மேலும் இந்த பயிற்சி தொடர்ந்து இப்பயிற்சி பள்ளியில் தொடரும் என பேசினார்

RELATED ARTICLES

Recent News