விநியோகஸ்தரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நெல்சன்?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார், Filament Pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ப்ளெடி பெக்கர் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். கவின் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படத்தை, சிவபாலன் என்பவர் இயக்கியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களால், படுதோல்வி அடைந்தது. இதனால், விநியோகஸ்தர்கள் சிலரும் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது. இவ்வாறு இருக்க, ப்ளெடி பெக்கர் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர் ஒருவர், இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நெல்சன் திலீப்குமாரிடம் கேட்டுள்ளார்.

இதனை கேட்ட அவர், மறுப்பு எதுவும் சொல்லாமல், கேட்ட தொகையை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டுவிட்டாராம். இந்த தகவல், சினிமா வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News