NCC என்று அழைக்கப்படும் தேசிய மாணவர் படை, இந்தியா முழுவதும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் அமைப்பாக உள்ளது. அரசு சார்பில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், மாணவர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தேசிய மாணவர் படையின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, வடகிழக்கு இந்தியாவில் செயல்பட்டு வரும் தலைமையகத்தில், பிரம்மாண்ட கார் பேரணி நடத்தப்பட்டது.
கடந்த 6-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த பேரணி, வரும் 26-ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. இந்த கார் பேரணி, இதுவரை, 277 பள்ளிகளிலும், 151 கல்லூரிகளிலும், 6 மாநிலங்களிலும் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த பேரணியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், மாணவர்கள் மத்தியில், நட்புணர்ச்சி, தலைமைத்துவம், தேசபக்தி ஆகியவற்றை விதைக்கவே, நடத்தப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் படையின் கூடுதல் பொது இயக்குநர் ககன் தீப் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி, கடந்த 19-ஆம் தேதி அன்று, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் மாவட்டத்திற்கு சென்றது. அங்கு, தவாங் போர் நினைவிடத்திற்கு சென்று, மரியாதை செலுத்தப்பட்டது.