தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவருடைய இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் ஜவான் படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகை 8 கோடி ரூபாயை நெருங்கியிருப்பது இதுதான் முதல்முறை.