நடிகை நயன்தாரா , தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் இவரது, அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
அதன்படி சமீபத்தில் வெளியான ஆடை படத்தின் இயக்குனர் ரத்தினகுமார் உருவாக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் படத்தின் இயக்குனர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.