அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அருகே (ஜூலை 15) இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்ள வந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயத்துடன் அடைந்த பாலசுப்பிரமணியரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர்.
மதுரையில் அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.