தமிழ் சினிமாவின் பிரபலமான கிடார் இசைக்கலைஞராக திகழ்ந்த சந்திரசேகர் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ் ஆகியோரிடம் சந்திரசேகர் பணியாற்றியுள்ளார். மேலும் இளையராவின் இசையில் பல படங்களில் இசைக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இசைகலைஞர் சந்திரசேகர் காலமானார்.
அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இசைப் பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவருடைய மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.