ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாகும்.
இந்தியாவில் நடந்த கொடூர ரயில் விபத்துக்கள் சில :
1981 ஜூன் 6, அன்று சஹர்சா பீகார் அருகே பாக்மதி ஆற்றில் பயணிகள் ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500 முதல் 800 பேர் உயிரிழந்தனர்.
1995 ஆகஸ்ட் 20, அன்று உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் அருகே காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 358 பேர் பலியானார்கள்.
1999 ஆகஸ்ட் 2 அன்று அவாத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 268 பேர் பலியானார்கள் மற்றும் சுமார் 359 பேர் காயமடைந்தனர்.
மே 23, 2012 அன்று, ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸ் ஆந்திரப் பிரதேசம் அருகே சரக்கு ரெரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெட்டிகள் தடம் புரண்டது. அதில் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அந்த பெட்டியில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர். சிக்னலைக் கவனிக்காமல் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் டிரைவர் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.